சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய நிலவு கண்டுபிடிப்பு

Written by vinni   // December 24, 2013   //

moonசூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முறையாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியனை மையமாக கொண்டு அதனை சுற்றிவரும் கோள்களை சூரியக் குடும்பம் என்று அழைக்கிறோம்.

இந்த கோள்கள் மத்திய ரேகை தடத்தில் சூரியனை வலம் வருகின்றன.

இந்நிலையில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் கிரகங்கள் இருப்பது குறித்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.

சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறு கிரகங்களை மையமாக வைத்து சுற்றும் நிலவுகளை எக்ஸோமூன் என அழைக்கிறார்கள்.

சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 850 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை வியாழனை போன்றவைதான்.

இதுபற்றி இன்டியானாவில் உள்ள நாட்ரிடேம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற விஞ்ஞானி Gravitational microlensing (கிராவிடேஷனல் மைக்ரோ லென்சிங்) மூலம் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வானியல் ஆய்வு மேற்கொண்டார்.

அவ்வாறு ஆய்வு செய்யும்போது, பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்கு முன்பாக ஒரு பொருள் கடந்ததை கண்டார்.

அதை தொடர்ந்து சிறிய பொருள் ஒன்று கடந்ததையும் கண்டார்.

இந்த இரண்டு பொருட்களும் கிரகமும் அதன் நிலவுமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.

கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் நிலவு பூமியை விட அரை மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன.

இது நிலவுதான் என்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட்ட முதல் நிலவு இதுவாகத்தான் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.