ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் அமெரிக்காவில் இலங்கைக்கு எதிராக பிரசாரம்!

Written by vinni   // December 24, 2013   //

srilanka flgஓய்வு பெற்றுக்கொண்ட இராணுவ அதிகாரியொருவர் அமெரிக்காவில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,

ஓய்வு பெற்றுக்கொண்ட குறித்த இராணுவ அதிகாரி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த அதிகாரி, இலங்கை தொடர்பில் போலியான தகவல்களை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு வழங்கி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

வன்னிப் போரின் பின்னர் குறித்த இராணுவ அதிகாரி உள்ளிட்ட சிலர் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அறிந்து கொண்ட அரசாங்கம் குறித்த இராணுவ அதிகாரியை ஓய்வுறுத்தியுள்ளது.

2014ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளன.

இது தொடர்பிலான தீர்மானத்திற்கு சாட்சியாக குறித்த இராணுவ அதிகாரியை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ அதிகாரி அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு 100 பக்கங்களைக் கொண்ட சத்தியக் கடதாசி ஒன்றையும் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.