இலங்கை தமிழர் பகுதியில் புதைகுழி தோண்டும் போது 11 மனித மண்டை ஓடுகள் கிடைத்தன

Written by vinni   // December 24, 2013   //

mandai-oduஇலங்கையில் தமிழர் பகுதியான மன்னார் திருக்கேதீஸ்வரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு வேலைகளுக்காக வீதியின் அருகே மண்ணை தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு மண்டை ஓடுகள் மற்றும் மனித எலும்புகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் புதை குழி தோண்டும் பணிகள் நடந்தன. அதன் மூலம் இங்கு புதைக்கப்பட்டிருந்த 11 மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று புதைகுழி தோண்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. கொழும்பில் இருந்து விசேஷ அதிகாரிகள் குழு வருகை தந்த பின்னர் அவர்கள் முன்னிலையில் இப்புதை குழி தோண்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி கடந்த 1990 முதல் 1993–ம் ஆண்டுவரை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. அப்பகுதியை அறிவிக்கப்படாத உயர் பாதுகாப்பு வளையமாக ராணுவத்தினர் பிரகடனப்படுத்தி வைத்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட மண்டை ஓடுகளில் காயங்கள் இருந்த தடயங்கள் காணப்படுகின்றன. இந்த தகவலை சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அபிவிருத்தி மந்திரி, டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.