வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய காதலன்

Written by vinni   // December 24, 2013   //

video_game_proposal_002அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகானைச் சேர்ந்த 3டி ஆர்ட்டிஸ்ட் ராபர்ட் ஃபிங்க்.

இவர் ஏஞ்சல் ஒயிட் என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தனது காதலை தெரிவிப்பதற்காக வித்தியாசமான முறையில் யோசித்துள்ளார்.

அதாவது ‘Knight Man, A Quest For Love’ என்ற வீடியோ கேமை வடிவமைத்து, தன் காதலியிடம் கொடுத்துள்ளார்.

இதில் பல சாகசங்களை செய்து இளவரசியை காப்பாற்றும் நாயகன், கடைசியில் என் காதலை ஏற்றுக் கொள்கிறாயா என கேட்கிறான்.

அப்போது Yes அல்லது No என இரண்டு பட்டன்கள் வருகிறது.

இதனை பார்த்த ஏஞ்சல், Yes பட்டனை அழுத்து, காதலனுக்கு பச்சை கொடி காட்டு விட்டாராம்.

கிட்டத்தட்ட 5 மாதங்களாக தயாரித்த இந்த வீடியோ கேமின் கதாநாயகி பெயர் ஏஞ்சல் ஒயிட் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.