மகனின் அஸ்தியை வைரமாக மாற்றிய இத்தாலியத் தந்தை

Written by vinni   // December 24, 2013   //

human_diamond_001இத்தாலியில் தனது இறந்துபோன மகனின் சாம்பலை வைரமாக, தந்தையொருவர் மாற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டில் இறந்துபோனவரை எரித்தபின் கிடைக்கும் சாம்பலில் உள்ள கார்பனைப் பிரித்தெடுத்து ஒரு அறையில் பாதுகாத்து, அதன்பின் அதிக அழுத்தம் மற்றும் எரிமலை ஒத்த வெப்பத்தை அந்த அறைக்குள் செலுத்துவதன்மூலம், அதனை வைரமாக மாற்றுகின்றனர்.

இந்த நினைவஞ்சலி வைரம் செய்யப்படுவதற்கு 18,000 டொலர் செலவாகும் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தாலியின் வடக்குப்பகுதியில் உள்ள டிரேவிசோ என்ற நகரில் வாழ்ந்துவரும் 55 மதிக்கத்தக்க செல்வந்தர் ஒருவரின் 20 வயது மகன் இந்த ஆண்டு ஆரம்பத்தில் கார் விபத்து ஒன்றில் இறந்துபோனான். அவனது உடல் சொந்த ஊரிலேயே புதைக்கப்பட்டது.

அதன்பின்னரே அவருக்குத் தனது ஆசை மகனை என்றென்றும் அருகில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதனால் புதைக்கப்பட்ட அவனது உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

எரித்தபின் கிடைத்த சாம்பலை சேகரித்து அந்தத் தந்தை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பினார். சரியாக எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் அவரது மகனின் நினைவஞ்சலி வைரம் அவருக்குக் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.