கருணாநிதிக்கு சோனியாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Written by vinni   // December 24, 2013   //

Sonia_Gandhi_1125682cதிமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதனையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தி, நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம், கருணாநிதிக்கும், அவர் குடும்பத்தாருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

மேலும் கருணாநிதி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ சோனியாகாந்தி வாழ்த்தியுள்ளார்.

அதேபோல தனக்கும் குடும்பத்தினருக்கும் சோனியாகாந்தி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

அதேசமயம் மத்திய அமைச்சர்களான பா.சிதம்பரம், வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அமைதி காத்தனர். கூட்டணியில் இருந்து விலகிய பின்னரும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு கோரியது திமுக. அதேபோல சம்பவம் நாடாளுமன்ற தேர்தலில் நடைபெறலாம் என்றே பேசப்பட்டது.

திமுக உடன் கூட்டணி இல்லை என்று கூறினாலும் பாமகவை இழுப்பதற்கான முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. அன்புமணி, ஸ்டாலின் சந்திப்பும் கவனித்திற்குள்ளாகியுள்ளது. அதேபோல தேமுதிகவிற்கும் பேராயர் எஸ்ரா சற்குணம் மூலம் தூது விடப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்ட காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா புத்தாண்டு வாழ்த்து மூலம் கூட்டணிக்கான புதுக்கணக்கினை தொடங்கியுள்ளார். மோடியை நல்ல மனிதர் என்று கருணாநிதி கூறியதும் கூட காங்கிரஸ் கட்சித் தலைவியை யோசிக்க வைத்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Similar posts

Comments are closed.