விடுதி மாணவியை கற்பழிக்க முயன்ற பிரின்ஸ்பாலுக்கு தர்ம அடி

Written by vinni   // December 16, 2013   //

abuseராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஜாப்னர் நகரில் ‘தாகூர் பப்ளிக் ஸ்கூல்’ என்ற பெயரில் விடுதியுடன் கூடிய தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இவர்களிடம் பள்ளி முதல்வர் பன்வார் சவுத்ரி (40) தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், விடுதியில் உள்ள ஒரு மாணவியை பள்ளி முதல்வர் கற்பழிக்க முயன்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த பிற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் பள்ளியின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். பள்ளி முதல்வரையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் விரைந்தனர். பின்னர் பொதுமக்களின் பிடியில் இருந்து பள்ளி முதல்வரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை மீட்காவிட்டால் பொதுமக்களே அடித்து கொலை செய்திருப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதேசமயம் பள்ளி முதல்வர் மீது முறைப்படி புகார் அளிக்க எந்த மாணவியும் முன்வராததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.


Similar posts

Comments are closed.