வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் – சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்

Written by vinni   // December 16, 2013   //

9edffa7c-5401-417b-960e-743d3892faa1_S_secvpfசிங்கப்பூரில் கடந்த வாரம் நடந்த விபத்து ஒன்றில், தமிழர் ஒருவர் உயிரிழந்ததால் அங்கு கலவரம் ஏற்பட்டது. இதில் பல்வேறு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், பலருக்கு படுகாயமும் ஏற்பட்டது.

இந்த கலவரம் தொடர்பாக 33 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள அவர், இது குறித்து டோக்கியோவில் கருத்து வெளியிட்டார்.

“சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர். அவர்களுடைய சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது” என்றார்.

“வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்து வரும் அதே நேரத்தில், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.


Similar posts

Comments are closed.