டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை

Written by vinni   // December 16, 2013   //

1b5f9980-63a5-481e-b654-0ec6a1bcdb03_S_secvpfகடந்த 4–ந்தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. 31 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதாவோ, 28 தொகுதிகளை கைப்பற்றிய ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோ ஆட்சி அமைக்க முன் வரவில்லை.

எந்த கட்சியும் உரிமைகோரி வராததால் டெல்லி கவர்னர் நஜீப் முறைப்படி அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அந்த கட்சியின் முதல்–மந்திரி வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் கவர்னரை சந்தித்தார். போதிய மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாது என்று மறுத்து விட்டார்.

இதையடுத்து 2–வது பெரிய கட்சியான ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் முன் வந்தது.

அதன்படி கவர்னரை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாட்கள் அவகாசம் கேட்டார். ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து ஆளுநர் இன்று உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்துமாறு பரிந்துரைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ஷிண்டே, சட்ட வல்லுனர்களிடம் கருத்து கேட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.