இலங்கை தொடர்பாக கடுமையான யோசனை முன்வைக்கப்படும் – டேவிட் கமரூன்

Written by vinni   // December 16, 2013   //

david-cameron-inter_791872cஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்திற்கான தயார்ப்படுத்தல்களை இலங்கை முன்னரை அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இல்லாவிட்டால் பிரதிபலன்கள் மிகவும் கடுமையானதாக இருக்கக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரோம் இணக்கப்பாடுகளில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என சிலர் கூறுகின்றனர்.

இது அறியாமல் கூறும் கதைகள். உலகில் இருப்பது ஒரு சர்வதேச நீதிமன்றம் அல்ல. யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை.

அதற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றத்திற்கே அவர் கொண்டு செல்லப்பட்டார்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான பணிப்பாளர் மொரோனோ ஒக்கம்போ இலங்கைக்கு எதிரான வழக்கு கோப்பு ஒன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் வெளிப்படையான சுயாதீனமான விசாரணை நடத்தப்படவில்லை என்றால் இலங்கை தொடர்பாக கடுமையான யோசனை முன்வைக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்தார்.

இதனை சிறிய விடயமாக கருதிவிட முடியாது. கமரூன் கோமாளி அல்ல. அத்துடன் அவர் தனக்கு தெரியாமல் கடிதங்களை எழுதும் செயலாளர்களையும் அதிகாரிகளையும் வைத்திருப்பவர் அல்ல.

இலங்கை தொடர்பில் அவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்கும் போது இது அவரது அரசியல் கௌரவம் தொடர்பான பிரச்சினை.

இதனால் எதிர்வரும் மார்ச் மாதம் முழுமையான தரவுகளுடன் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்று கட்டாயம் முன்வைக்கப்பட போவது உறுதியானது என்றார்.


Similar posts

Comments are closed.