ஜனநாயக கோட்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமாம் : தாய்லாந்துக்கு அறிவுரை கூறும் இலங்கை

Written by vinni   // December 16, 2013   //

19-janதாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் சகல கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையின் வளர்ச்சி தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஜனநாயக கோட்பாடுகளை கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலமாக தீர்வுகளை காணும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது.

தாய்லாந்து மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் சகல கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவத்ரா கடந்த மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்தினார்.

பிரதமர் யிங்லக் சினவத்ராவின் அரசாங்கத்தை கலைக்க வேண்டும் எனக் கோரி தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக வெகுஜன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால் அங்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.

2010 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமரும் தற்போதைய பிரதமரின் சகோதரருமான தக்ஷின் சினவத்ரைாவுக்கு எதிராக பேங்கொக்கில் நடைபெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.


Similar posts

Comments are closed.