ஆபிரிக்க நாடுகளுடான உறவு இலங்கைக்கு முக்கியமானது – மகிந்த

Written by vinni   // December 15, 2013   //

mahindarajapaksheஏனைய நாடுகளின் உறவை காட்டிலும், ஆபிரிக்க நாடுகளுடனான உறவு இலங்கைக்கு முக்கியமானது என்பதை தாம் அறிந்து வைத்திருந்ததாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கென்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு அங்கு கென்யாவின் ஜனாதிபதி கென்யாட்டாவை சந்தித்து பேசும் போது அவர் இதனைத் தெரிவத்துள்ளார்.

2005ம் ஆண்டு தாம் முதன் முதலில் ஜனாதிபதியாக பதவி ஏற்ற போது, அபிரிக்க நாடுகளுடனான உறவை புதுப்பிக்கும் வகையிலான வெளிநாட்டு கொள்கைகளை வகுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எந்த தருணத்திலும் ஆதரவளிப்பது ஆபிரிக்க நாடுகளே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.