அலுவலகத்தில் செக்ஸ் தொல்லை: பெண்களின் வேலை காலி

Written by vinni   // December 15, 2013   //

officetired_workers_001.w245அலுவலகம், தொழிற்சாலை போன்ற பணி இடங்களில் ஆண்கள் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்தால், பெண் பணியாளரை வேலையில் இருந்து நீக்கலாம் என்ற புதிய சட்டவிதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய சட்டவிதி மூலம் பெண்கள் பழிவாங்கும் நோக்கில் பொய் புகார் அளித்துள்ளார்கள் என்றால், புகார் அளித்த பெண்மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டவிதியின் மூலம் பெண்கள் அளிக்கும் புகார் விசாரணை கமிட்டி மூலம் விசாரிக்கப்பட்டு உண்மை கண்டறியப்படும் என்றம் தீய எண்ணத்துடன் பழிவாங்கும் நோக்கத்தில் பொய் புகார் அளித்து இருந்தால், அந்தப் பெண் மீது நடவடிக்கை பாயும் எனவும் கூறியுள்ளார்.

மன்னிப்பு கடிதம் கேட்பது, எழுத்து மூலம் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது, ஊதிய உயர்வு, பதவி உயர்வை நிறுத்திவைப்பது மற்றும் வேலையில் இருந்தே நீக்குவது போன்ற நடவடிக்கைகளை பெண்கள் மீது எடுக்கமுடியும்.

மேலும் புகார் குறித்து கமிட்டி எடுக்கும் நடவடிக்கைகளை வெளியிடுவோர் ரூ.5,000 அபராதம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.