அன்னா ஹசாரே கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் : அவரது உடல் எடை 4 கிலோ குறைந்தது.

Written by vinni   // December 15, 2013   //

Anna-hazareபாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து மத்திய அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது.

ஆனால் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அனேகமாக நாளை (திங்கட்கிழமை) நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

அதன்படி, அவரது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி பகுதியில் உள்ள யாதவ் பாபா கோவிலில் கடந்த 10-ந்தேதி முதல் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே இன்று பிற்பகலில் மிகவும் களைப்பாக காணப்பட்டார். உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து அவரது உடல் எடை 4 கிலோ குறைந்துள்ளதாக அவரை இன்று பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.