எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் : கனவுகளை நனவாக்கி காட்டுகிறோம்

Written by vinni   // December 15, 2013   //

narendra_modi--26_moss_031713111857உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த பா.ஜ.கட்சி பேரணியில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் அம்மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அம்மாநில மக்களை பார்த்து, “நீங்கள் பல கட்சிகளை ஆட்சியில் உட்காரவைத்து பரிசோதித்துள்ளீர்கள். ஒரே ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நாங்கள் உங்கள் கனவுகளை நனவாக்கி காட்டுகிறோம்” என்றார்.

அவர் மேலும் பேசும்போது இங்குள்ள மலைகளில் நல்ல நீர்வளம் உள்ளது. ஆனால் இன்னமும் நாடு இருளில் மூழ்கிக்கிடக்கிறது. மலைகளில் உள்ள நீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். அதை செய்ய இங்குள்ள அரசுக்கு நேரமில்லை. வளர்ச்சி திட்டங்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை இங்குள்ள இளைஞர்களை பாதித்துள்ளது. வேலையின்மை காரணமாக இங்குள்ள இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

சுற்றுலாத்துறை முன்னேறுவதற்கு வாய்ப்பிருந்தும் வளர்ச்சியடையவில்லை. இந்த நிலை மாறவேண்டும். நாட்டை ஆண்டுகொண்டிருப்பவர்கள் மக்கள் வறுமையில் வாடுவதை விரும்புகிறார்கள். எனவே அவர்கள் வெளியேறும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றும் மோடி பேசினார்.


Similar posts

Comments are closed.