இயற்கைக்கு முரணான ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது

Written by vinni   // December 15, 2013   //

g‘ஓரினச்சேர்க்கை குற்றமல்ல’ என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தீர்ப்பினை ரத்து செய்தது.

‘இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன்கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கோர்ட்டு கூற முடியாது’ என சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில், ஓரினச்சேர்க்கை தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

ஆணோடு ஆண் உடலுறவில் ஈடுபடுவது என்பது இயற்கையின் நியதிகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டது; முரண்பாடானது. இயற்கையோடு முரண்பட்ட இத்தகைய நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கவே மாட்டோம்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிப்பிழக்க செய்யும் மத்திய அரசின் எல்லா நடவடிக்கையையும் பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும்.

377வது சட்டப்பிரிவின்படி, ஓரினச் சேர்க்கை என்பது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படக் கூடிய கொடுங்குற்றம் என்ற கருத்தை பா.ஜ.க. ஆதரிக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.