சீனாவின் முதல் விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கியது

Written by vinni   // December 14, 2013   //

433d7980-4bfa-4d6f-8177-9643d9681cc5_S_secvpfசீனா கடந்த 2–ந்தேதி முதன் முறையாக சந்திரனுக்கு ‘சேஞ்ச்-3’ என்ற விண்கலத்தை ஸிவாங் தளத்தில் இருந்து அனுப்பியது. இந்த விண்கலத்தை ‘லாங் இந்த மார்ச் 3பி’ என்ற ராக்கெட் சுமந்து சென்றது.

‘சேஞ்ச்–3’ விண்கலம் திட்டமிட்டபடி 12 நாள் பயணத்துக்கு பிறகு இன்று சந்திரனில் தரை இறங்கியது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்படியாக ஆளில்லா விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய மூன்றாவது நாடு என்ற பட்டியலில் சீனா இடம்பெற்றுள்ளது.

நான்கு கால்களுடன் இந்த விண்கலம் முயல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதற்கு “ஜேட் ராபிட்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சந்திரனில் ஓரண்டு தங்கியிருந்து அங்கிருந்தபடியே பூமியின் மேற்பரப்பில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்து சீனாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்துக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

2020-ல் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் சீனாவின் விண்வெளி திட்டத்தின் முதல் கட்டமாகவும் ‘சேஞ்ச் 3’-ன் வெற்றிகரமான இந்த பயணம் கருதப்படுகிறது.


Similar posts

Comments are closed.