7 லட்சம் இந்தியர்கள் ஆண்டு தோறும் புற்றுநோயால் பலி: உலக சுகாதார மையம் தகவல்

Written by vinni   // December 14, 2013   //

6119868318_915dbefa99_z_0உலக சுகாதார மையம் சர்வதேச புற்றுநோய் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் புற்று நோய் தாக்கம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2012–ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பபட்டுள்ளனர்.

அவர்களில் 4 லட்சத்து 77 ஆயிரம் ஆண்களும், 5 லட்சத்து 37 ஆயிரம் பெண்களும் அடங்குவர். அதே போன்று புற்று நோயால் மரணம் அடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஆண்டு தோறும் 7 லட்சம் பேர் புற்று நோயால் இறப்பது தெரியவந்துள்ளது. ஆண்களில் 3 லட்சத்து 56 ஆயிரம் பேரும், பெண்களில் 3 லட்சத்து 26 ஆயிரம் பேரும் இறக்கின்றனர்.

அதே நேரத்தில் 75 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் 10 பேரில் ஒருவர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகுகிறார். புற்று நோய் பாதித்து இறப்பவர்களில் ஆண்களை விட அதிக பெண்கள் தான் மார்பக புற்று நோயால் இறக்கின்றனர். மேற்கண்டவை உள்பட பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.