வடமாகாண சபை உறுப்பினர்கள் – இந்தியத் துணைத்தூதுவர் சந்திப்பு

Written by vinni   // December 12, 2013   //

north_pc_meeting_003-450x253வடமாகாண சபை உறுப்பினர்கள் 07 பேர் இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கத்தைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் இந்திய அரசின் அழுத்தத்தால் 13ம் திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபையின்,  தற்போதைய நிலை கொண்டு செல்வதில் எதிர்நோக்கப்படும் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடியதோடு, 13ம் திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்மெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்திய துணைத் தூதுவர் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் மாவட்டத்தின் நிலைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், மேரிகமலா குணீலன், துரைராசா ரவிகரன் மற்றும் மன்னார் மாவட்டப்பிரதிநிதி சிராய்வா வவுனியா மாவட்டப் பிரதிநிதி எஸ்.லிங்கநாதன் உள்ளிட்ட 07 பேர் கலந்து கொண்டதாகத் தெரிய வருகிறது.

மேற்படி சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற போதும் உள்ளே பேசிய விடயங்கள் உறுதியாகத் தெரியவரவில்லை.

இருந்த போதும் நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் நில அபகரிப்புக்கள் மாகாணசபையை கொண்டு செல்வததில் உள்ள நெருக்கடிகள் போன்ற பல விடயங்களும் பேசப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.