டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் -டோனி

Written by vinni   // December 12, 2013   //

donieஒருநாள் போட்டியில் வெற்றியை பறிகொடுத்தாலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.

ஒருநாள் போட்டியில் 2 ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவி தொடரை இழந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் இந்திய அணி விளையாட ஆரம்பித்த போது மழையால் பாதிக்கப்பட்டது, மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் 3 போட்டி கொண்ட தொடரை தென் ஆப்ரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இதுகுறித்து அணித்தலைவர் டோனி கூறுகையில், ஒருநாள் தொடரை இழந்ததன் மூலம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம்.

வேகப்பந்து, பவுன்சை எப்படி எதிர்கொள்வது என்பதை ஒருநாள் தொடரில் அறிந்தோம்.

இதனால் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் திணறிய இஷாந்த்சர்மா கடைசி போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றும், தென் ஆப்ரிக்க அணியில் சிறந்த ஆல்ரவுண்டர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.