சிறுமிக்கு முத்தம் கொடுத்த சிறுவன் : இரண்டு நாள் சஸ்பெண்ட்!

Written by vinni   // December 12, 2013   //

us_boy_elton_001அமெரிக்காவின் தன்னுடன் படிக்கும் 6 வயது சிறுமிக்கு முத்தமிட்ட சிறுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான்.

அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள கேனன் நகரில் லிங்கன் ஸ்கூல் ஆஃப் சயன்ஸ் அன்ட் டெக்னாலஜி பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன், தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்து விட்டான்.

இதற்காக சிறுவனை இரண்டு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளதுடன், பாலியல் அத்துமீறல் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து எல்டனின் தாய் ஜெனிபர் சான்டர்ஸ், எனது மகன் குறித்த சிறுமிக்கு முத்தம் கொடுத்ததற்காக முன்பு ஒரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.

தற்போது மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது, இதை பாலியல் அத்துமீறல் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலியல் என்றால் என்ன என என் மகன் என்னிடம் கேட்கிறான் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறுவனோ, தனக்கு அந்த சிறுமியை பிடித்திருப்பதாகவும், வகுப்பு நடந்து கொண்டிருந்த போது அச்சிறுமியின் கையில் முத்தமிட்டதாகவும் கூலாக தெரிவிக்கிறார்.

 


Similar posts

Comments are closed.