பூனைகளின் ஹோட்டல்! பிரான்சில் ஓர் புதுமை

Written by vinni   // December 12, 2013   //

catsபிரான்சில் முதன்முறையாக பூனைகளுக்காகவே ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பாரிஸ் நகரில் Aristide என்ற பெயரில் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.

வேலை விஷயமாக அல்லது விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பொழுது, தங்கள் பூனையை இங்கே விட்டு செல்லலாம் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு பூனைகளுக்கென பிரத்யேக உணவுகள், படுத்து உறங்குவதற்கு பஞ்சு மெத்தைகள், விளையாடுவதற்காக மெத்தை மேடைகள் மற்றும் Cat Games என்ற பூனை விளையாட்டுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இது பூனைகளுக்கான ஐந்து நட்சத்திர ஓட்டல்(five Star hotel) என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

இதன் மேலாளர் வளர்த்து வரும் பூனையின் பெயரே இவ்வோட்டலுக்கும் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.