கிரேனினால் ஜேர்மனியில் நேர்ந்த அவலம்

Written by vinni   // December 12, 2013   //

dead_body_ஜேர்மனியில் கிரேன் ஒன்று கூரையை பிய்த்து கொண்டு விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஜேர்மனியின் பேட் ஹோம்பர்க் மாகாணத்தில் உள்ள மளிகை கடையில் இன்று காலை 11.30 மணியளவில் 20 டன் எடையுள்ள கிரேன் கடையின் மீது விழுந்தது.

அப்போது கடைக்குள் 74 வயது பெண், அவரின் மகள், 40 வாடிக்கையாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இருந்தனர்.

விபரம் அறிந்தவுடன் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 42 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாபமாக பலியானார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இன்னும் பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என வீரர்கள் சந்தேகிக்கின்றனர்


Similar posts

Comments are closed.