தெற்காசிய நாடுகளில் மலேரியாவை ஒழித்து வெற்றி பெற்ற நாடு இலங்கை – பில் கேட்ஸ்

Written by vinni   // December 12, 2013   //

Bill-Gates-9307520-1-402தெற்காசிய நாடுகளில் மலேரியாவை ஒழித்த நாடு என்ற வகையில், இலங்கையை பெயரிட கிடைத்தமை இலங்கை பெற்ற வெற்றி என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மலேரியாவை ஒழிக்க இலங்கை உரிய நடவடிக்கைகளை எடுத்தமை பாராட்டத்தக்கது.

இந்த விடயத்தில் இலங்கை தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு முன்ணுதாரணமாக செயற்பட்டுள்ளது எனவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பாலித மஹிபாலவும் நடந்த நல்லெண்ண சந்திப்பொன்றின் போதே கேட்ஸ் இதனை கூறியுள்ளார்.

மைக்ரோசொப்ட் தலைவர் பில் கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் விசேட கலந்துரையாடலுக்கு இடையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த விசேட கலந்துரையாடலில் இலங்கையின் சார்பில் பாலித மஹிபால கலந்து கொண்டார்.


Similar posts

Comments are closed.