இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு ஆதரவான தீர்ப்பொன்றை வழங்கியது அவுஸ்திரேலிய நீதிமன்றம்

Written by vinni   // December 12, 2013   //

ausஅவுஸ்திரேலிய குடியேற்ற அமைச்சர் ஸ்கொட் மொரிஸ்சன், தனது திணைக்களம் விட்ட தவறு காரணமாக இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று வழங்கினர். குறித்த பெண் வீசா அனுமதிக்கான விண்ணப்பம் செய்ய அமைச்சரின் பரிந்துரை அவசியம் என ஒரு பிழையான சட்ட கட்டுப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பெயர் குறிப்பிடப்படாத இந்த பெண் 2010 ஆம் ஆண்டு படகு மூலமாக கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்தார்.

இந் பெண் வீசா அனுமதியின்றி அவுஸ்திரேலியா சென்றதால், குடியேற்ற சட்டத்தின் பிரகாரம் அமைச்சரின் அனுமதியை பெறாமல் வீசாவுக்கான விண்ணப்பத்தை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.

எனினும் இந்த பெண் உண்மையான அகதி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு இந்த பெண் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று ஒரு பாதகமான மதிப்பீட்டை கொடுத்துள்ளமை, அவரது வழக்கில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெண் ஆயுத போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதாகவும் வன்முறை மூலம் தமிழ் தாயகத்தை அடையும் நோக்கத்தை கொண்டிருந்தாகவும் இதனால் இந்த பெண்ணுக்கு வீசா வழங்கினால் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது.

இதனை கவனத்தில் கொண்ட குடிவரவு திணைக்களம் இந்த பெண்ணுக்கு வீசா வழங்குவதில்லை எனவும் அவரது விண்ணப்பத்தை அமைச்சரின் பரிசீலனைக்கு உட்படுத்துவதில்லை எனவும் தீர்மானித்தது.

திருமணமான இந்த பெண் சிட்னியில் உள்ள விலாவூட் தடுப்பு முகாமில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் இலங்கைக்கு திரும்ப முடியாது. அவருக்காக மூன்றாவது நாட்டை கண்டறிய வேண்டும். எனினும் அந்த பெண்ணுக்கு வேறு எவரும் கிடையாது.

இந்த நிலையில் அமைச்சர் அதிகாரம் தொடர்பான சட்டப் பிழையால் குறித்து பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளனர். இதன் விளைவாக அந்த பெண்ணின் வழக்கு தொடர்பான முடிவு அமைச்சரின் கவனத்திலேயே தங்கியுள்ளது.


Similar posts

Comments are closed.