கென்யா சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார்

Written by vinni   // December 12, 2013   //

mahinda_rajapaksaகென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று மாலை தலைநகர் நைரோபியை சென்றடைந்தார்.

ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை கென்ய ஜனாதிபதி உகுரு கென்யாட்டா, துணை ஜனாதிபதி வில்லியம் ரூடோ, வெளிவிவகார அமைச்சர் ஆமீனா மொஹமட் ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. கென்யா சென்றுள்ள ஜனாதிபதி நைரேபி நகருக்கு அருகில் உள்ள நசராணி நகரின் சர்வதேச விளையாட்டுத் திடலில் இன்று நடைபெறும் கென்யாவின் 50 வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்கிறார்.

கென்யா 1963 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

அதேவேளை இலங்கை ஜனாதிபதிக்கும் கென்யா ஜனாதிபதிக்கும் இடையிலான இருத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நாளை மறுதினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன் போது வர்த்தகம், சுற்றுலா, கலாசாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.


Similar posts

Comments are closed.