டெல்லியில் ஆட்சியமைக்கப்போவது யார்? பேச்சுவார்த்தைக்கு வருமாறு கவர்னர் அழைப்பு

Written by vinni   // December 12, 2013   //

new_delhi_zwsmL_16298டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளிவந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்று குழப்பம் நிலவி வந்தது.

தேர்தலில் அதிக இடங்களை பிடித்த கட்சி என்ற முறையில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. மறுபுறம் பா.ஜ.கவை விட 4 இடங்கள் குறைவாக பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர சுயேட்சை எம்.எல்.ஏ.வும், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க ஐக்கிய ஜனதா தள கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.வான ஷோயப் இக்பாலும் முடிவு செய்தனர். ஆனால் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க மறுத்துவிட்டன.

இந்நிலையில் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்த பின்பு அம்மாநில ஆளுனர் நஜீம் ஜங், டெல்லியில் ஆட்சியமைப்பது குறித்து இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளரான ஹர்ஷ்வர்த்தனை அழைத்துள்ளார்.

முன்னதாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆளுநரை நேற்று அழைத்து டெல்லி நிலவரம் குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேச்சுவார்த்தைக்குபின் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.