இலங்கை இந்திய உறவுகளுக்கு எதிராக நீதிமன்றில் மனு : இலங்கையுடனான சகல உறவுகளையும் மத்திய அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்

Written by vinni   // December 12, 2013   //

srilanka vs indiaஇலங்கை இந்திய உறவுகளுக்கு எதிராக நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றில் பொதுமக்கள் நலன் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையுடனான சகல உறவுகளையும் மத்திய அரசாங்கம் ரத்து செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வீ. ரமேஸ் என்பவரே இவ்வாறு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையுடன் இந்திய மத்திய அரசாங்கம் நெருங்கிய பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாதுகாப்பு பயிற்சி பெற்று வரும் சகல இலங்கையர்களையும் நாடு கடத்துமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது


Similar posts

Comments are closed.