மக்களுக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருவதால் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு அதிகரிப்பு

Written by vinni   // December 11, 2013   //

vettri news 4522அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பலை வலுப்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மக்களுக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு முதுகெலும்பு கிடையாது எனவும், பிரதேச சபை உறுப்பினர்கள் தைரியமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் ஒர் வெற்றுப் பேப்பராகவே மக்கள் கருதுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதனை விடவும் அரசாங்கம் நாய்களுக்கு நலன்களை வழங்குவதில் நாட்டம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கெரில்லா பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பொதுப்போக்குவரத்தில் செல்வதற்கு தடுமாறி வரும் தருணத்தில் அரசாங்கம் இரவு கார்பந்தயங்களை நடாத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தம்மை ஏமாற்றி வருவதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.