துபாயில் 96.7 எப்.எம். மலையாள வானொலி தொகுப்பாளர்கள் கின்னஸ் சாதனை

Written by vinni   // December 11, 2013   //

1d995a6e-2376-4efb-b97d-fd3ccb089f9f_S_secvpfதுபாயில் 96.7 எப்.எம். மலையாள வானொலி நிலையத்தை சேர்ந்த சிந்து பிஜூ மற்றும் மிதுன் ரமேஷ் என்ற இரு தொகுப்பாளர்களும் நீண்ட நேர தொடரலை இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினர்.

“தல்கதோன்” என்ற இசை நிகழ்ச்சியை அவர்கள் இருவரும் 84 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து நிகழ்த்தி கின்னஸ் சாதனை புரிந்தனர்.

வியாழன் மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது ஞாயிறன்று இரவு 10.12 மணியளவில், பழைய கின்னஸ் சாதனையான ஹாட் எப்.எம். என்ற வானொலி நிறுவனத்தில் 77 மணிநேரம் 11 நிமிடங்கள் வரை நடந்த சாதனையை முறியடித்தது என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியானது அதைத்தொடர்ந்து திங்கள் காலை 5 மணிக்கு முடிவு பெற்றது. இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்த அவர்கள் 2 மணி 35 நிமிடங்களுக்கு இடைவேளை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து சிந்துவும், மிதுனும் மீண்டும் தனது வழக்கமான மாலை 5 மணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த கின்னஸ் சாதனையை, எக்ஸ்போ-2020 என்ற வர்த்தக கண்காட்சியை வென்ற துபாய்க்காக அவர்கள் அர்ப்பணித்தனர்.


Similar posts

Comments are closed.