வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தடை

Written by vinni   // December 11, 2013   //

277f27eb-7580-44d4-b539-51aa60a5e7b7_S_secvpfவெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. குறிப்பாக இந்தியா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி காலித் முகமது கான், இந்திய நிகழச்சியில் அனைத்தும் எதிர்மறை பட்டியலில் உள்ளதால் அப்பட்டியலிலுள்ள பொருட்களை இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதை பரிசீலித்தே இத்தடை பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 12-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அந்நாட்டு அரசுக்கும், மின்னணு தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து வரும் முபாஷிர் லக்மன் என்பவர் கடந்த மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரச்னைக்குரிய பேட்டியை தொடர்ந்து, தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் வாதிட்ட லக்மன் தரப்பு, 2006 ஆம் ஆண்டு பிறப்பித்த ஒழுங்குமுறை அரசாணையின்படி இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் இறக்குமதி செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருவதாகவும், ஆனால் இவ்வாறு இறக்குமதி செய்வது பாகிஸ்தானின் இறக்குமதி கொள்கைக்கும், மின்னணு தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் எதிரானதென்றும் கூறியுள்ளது.

தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை அத்துமீறி ஒளிபரப்பியதாகவும், இதற்காக ஆணையம் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில் எதிர்மறை பட்டியலில் உள்ள பொருட்களை சட்டரீதியான ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை வைத்து இறக்குமதி செய்யமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். எதிர்மறை பட்டியலில் உள்ள பொருட்களை இந்தியாவும் பாகிஸ்தானும் பரிமாறிக்கொள்ள முடியாதென்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய திரைப்படங்களை ஒளிபரப்புவதால் பாகிஸ்தானிய திரைப்படங்கள் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அந்நாட்டு உயர்நீதிமன்றம் இந்திய திரைப்படங்களை வெளியிட பல்வேறு நிபந்தனைகளை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப அனுமதியளித்தது இங்கு நினைவு கூறத்தக்கது.


Similar posts

Comments are closed.