இலங்கை மனித உரிமை மீறல்கள் : விசாரணை நடத்த ஐ.நா பிரதிநிதிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் ‍- ஐரோப்பிய ஒன்றியம்

Written by vinni   // December 11, 2013   //

European-Unionஎதிர்வரும் மார்ச் மாதம் கூடும் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில், இலங்கை தொடர்பான விடயங்கள் முக்கிய இடம் வகிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் மனித உரிமை, பொறுப்புக் கூறல் மற்றும் தமிழ் சிறுபான்மை இனத்தின் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது யோசனை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், மனித உரிமை மீறல் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு அனுமதிகளை வழங்கி, மேலதிக சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கையுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் கோரிக்கைகளை விடுத்துள்ளனர். கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு அதிகளவான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்க மற்றும் மனித உரிமை தொடர்பான பிரதிநிதி பேயானி போன்றோரின் இலங்கை விஜயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பிலான பிரதிநிதி உட்பட ஏனைய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.

சர்வதேச சமூகத்துடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற இலங்கை அக்கறை காட்ட வேண்டும். நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டி, நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அதனை மேம்படுத்த வேண்டும்.

அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.