அதிக சுமை ஏற்றச்சென்ற வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது : 14 பேர் பலி

Written by vinni   // December 10, 2013   //

accident_56உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோரகர் மாவட்டத்திலுள்ள முன்ஸ்யாரி மலைப் பகுதியில் அதிக சுமை ஏற்றச்சென்ற வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

கிர் என்ற கிராமத்தில் இவ்விபத்து நடந்தபோது 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிக சுமை ஏற்றிச்சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்த வேன் செங்குத்தான வளைவில் திரும்பும் போது 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும், காயமடைந்துள்ள 4 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.


Similar posts

Comments are closed.