விமானத்தில் அயர்ந்து தூங்கிய பயணி ,காதலியால் மீட்பு

Written by vinni   // December 10, 2013   //

download (2)அமெரிக்க விமானத்தில் அயர்ந்து தூங்கிய பயணியை யாரும் எழுப்பாததால் தனியாக தவித்தார்.

அமெரிக்காவை சேந்தவர் டாம் வாக்னர். இவர் லூசியானாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு ஒரு பயணிகள் விமானத்தில் புறப்பட்டு வந்தார். விமானத்தில் அவருக்கு ஜன்னல் ஒரத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

விமானத்தில் பயணம் செய்தபோது அவர் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டார். அந்த நேரத்தில் விமானம் லாஸ்ஏஞ்சல்சில் ஜார்ஜ்புஷ் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அங்கு பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றுவிட்டனர். அவர்களை தொடர்ந்து ஊழியர்களும் விமானத்தில் இருந்து வெளியேறினர். அப்போதும் பயணி டாம்வாக்னர் விமானத்துக்குள் இருக்கையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.

அவரை கவனிக்காமல் வெளியேறிய ஊழியர்கள் விமானத்தின் கதவையும் மூடிவிட்டு சென்றனர். இதற்கிடையே தூக்கம் கலைந்து திடீரென கண்விழித்த வாக்னர் விமானத்துக்குள் கும்மிருட்டாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் விமானம் தரை இறங்கியதையும், அனைவரும் வெளியேறியதையும் அறிந்தார். விமானத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவியாய் தவித்த அவர் தனது காதலிக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்து டாம் வாக்னரை வெளியே மீட்டார். இதற்கிடையே நடந்த தவறுக்கு விமான நிர்வாகம் அவரிடம் மன்னிப்பு கேட்டது. இதுகுறித்து விசாரணையும் நடக்கிறது.


Similar posts

Comments are closed.