திருச்சியிலிருந்து, இலங்கை புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு : பறக்கும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் உயிர் தப்பினர்

Written by vinni   // December 10, 2013   //

passenger_plane_001திருச்சியிலிருந்து, இலங்கை புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு உடனே கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று மாலை 4:00 மணிக்கு திருச்சியில் இருந்து 147 பயணிகளுடன் இலங்கை புறப்பட்டது.

விமான நிலைய ஓடுதளம் நோக்கி நகர்ந்து பறப்பதற்கு வேகம் எடுத்த போது விமான இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

இதையடுத்து விமானத்தை மீண்டும், விமான நிலையத்திற்கே கொண்டு வந்தார். உடன் விமானத்தை பரிசோதித்த பொறியியலாளர்கள் அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருந்ததை உறுதி செய்தனர்.

கோளாறு சரி செய்யப்பட்டு, மாலை, 4:50 மணிக்கு, விமானம், மீண்டும் இலங்கை புறப்பட்டுச் சென்றது.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அது பறக்கும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் உயிர் தப்பினர்.


Similar posts

Comments are closed.