ஜெனிவாவில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க , இராணுவத்தினரை காப்பாற்ற நான் தயார்! – சரத் பொன்சேகா

Written by vinni   // December 10, 2013   //

sarathfonsekaசுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித உரிமை ஆணைக்குழுவில் இராணுவத்தினருக்காக குரல் கொடுத்து அவர்களை காப்பாற்ற தயார். எனினும் சில நபர்களை காப்பற்ற நான் தயாரில்லை.

சட்ட ரீதியான இலங்கை அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சட்டத்திட்டங்கள் அனைத்தும் இலங்கைக்கும் பொருந்தும்.

இலங்கையில் போர் நடைபெற்ற போது தவறுகள் இடம்பெற்றனவா என்பதை அறிந்து கொள்ளும் தேவை எவருக்காகவது இருந்தால், இராணுவத்தின் சார்பில் ஆஜராகி நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க நான் தயாராக இருக்கின்றேன்.

எனினும் சில நபர்கள் தவறு செய்திருந்தால் அவர்களை நான் காப்பற்ற போவதில்லை. இராணுவத்தினருக்காக பேசுவேன். சகல சட்டங்களையும் மதித்து மனித உரிமைகளை பாதுகாத்து போரிடுமாறு நான் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருந்தேன் என்றார்


Similar posts

Comments are closed.