மலேசியாவில் பயங்கரம்: 5 தமிழர்கள் பலி

Written by vinni   // December 9, 2013   //

car_accc_001.w245மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 5 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
மலேசியாவில் உள்ள செனவாங்- பெடாஸ் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தேவக்குமார்(23), ரகுநாதன்(28), சுரேஷ்(29), ஆனந்த் மீனாட்சி(23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் விஜயகார்த்திக்(27) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவர்கள் அனைவரும் டொயோட்டா ஆல்டிஸ் காரில், சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. வாகனம் மலைப் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து இந்த கொடூர விபத்து நடந்துள்ளது.


Similar posts

Comments are closed.