பிரபல பாப் பாடகியின் உயிரைக் காக்கும் வேட்டை நாய்கள்

Written by vinni   // December 9, 2013   //

poop_dog_002பிரிட்டனில் பிரபல பாப் பாடகியை கொலை செய்ய திட்டம் தீட்டிய சதிச்செயல் அம்பலமாகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ஜாஸ் ஸ்டோன் (26). 2003ம் ஆண்டிலிருந்து பாப்புலர் பாடகியாக அவதாரம் எடுத்த இவர் கடந்த 10 வருடங்களாக புகழையும், பணத்தையும் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு மர்ம நபர்கள் இவரது வீட்டிற்குள் நுழைய முயன்றபோது காவலர்கள் அவர்களை மடக்கிப்பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாப் பாடகியை கொன்று விட்டு அவரது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள 1 மில்லியன் பவுண்டுகளை கொள்ளையடித்து விட்டு பின்னர் அவரது உடலை ஒரு நதியில் வீசிவிட்டுச் செல்லத் திட்டம் தீட்டியுள்ளார்கள் என்ற தகவல் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து அந்த மர்மநபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு ஜாஸ் ஸ்டோன் தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள நான்கு விலையுயர்ந்த பாதுகாப்பு வேட்டை நாய்களை வாங்கியுள்ளார். இந்த பாதுகாப்பு நாய்கள் இரவும், பகலும் இந்தப் பாடகியை பாதுகாத்துக் கொள்கின்றன.

இந்தப் பாதுகாப்பு நாய்களை மீறி எந்தவொரு மனித மனித நடமாட்டமும் இருக்க முடியாது, அந்த அளவிற்கு மோப்ப சக்தியுள்ள முரட்டு நாய்களை இவர் பாதுகாப்பிற்காக வைத்துள்ளார்.

இவருக்கு கடந்த 2011ம் ஆண்டில் மர்மநபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.