அசராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆண்மை பரிசோதனை

Written by vinni   // December 9, 2013   //

asramபாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட அசாரம் பாபுவின் மகன் நாராயண சாய்க்கு நடத்தப்பட்ட ஆண்மை சோதனையில் அவர் பாலியல் உறவில் ஈடுபட தகுதி உள்ளவராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் அமைத்துள்ள சாமியார் அசராம் பாபுவின் மகனான நாராயண் சாய் மீது இளம்பெண் ஒருவர் சூரத் பொலிசாரிடம் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக அவர் பொலிசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் அவரை டெல்லி-பஞ்சாப் எல்லையில் வைத்து கைது செய்தனர். அவருடன் உதவியாளர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சூரத் கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காகஅவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நாரயணசாயிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ஆண்மை பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவருக்கு நடத்தப்பட்ட ஆண்மை சோதனையில் அவர் பாலியல் உறவுவில் ஈடுபட தகுதி உள்ளவராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


Similar posts

Comments are closed.