படுதோல்லி அடைந்தது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக

Written by vinni   // December 9, 2013   //

vijiyakanthடெல்லி சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
தேமுதிக போட்டியிட்ட 11 தொகுதிகளில், அதிகபட்சமாக வசீர்பூரில் 380 வாக்குகளும், ஜனக்புரியில் 109 வாக்குகளும் கிடைத்தன. ஏனைய 9 தொகுதிகளிலும் இரட்டை இலக்கு எண்ணிக்கையிலான வாக்குகளே கிடைத்தன.

டெல்லி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த தேமுதிக போட்டியிட்டது. இதற்காக, தமிழகத்தில் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலையும் தவிர்த்து விட்டு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் 11 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை களம் இறக்கி இருந்தது.

இந்தத் தேர்தலையொட்டி, தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் டெல்லியில் 5 நாள்கள் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.