போரின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பாரிய கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதி

Written by vinni   // December 9, 2013   //

mahinda_rajapaksaயாழ்ப்பாண பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சி பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் இருந்து யாழ்ப்பாண பிராந்தியம் விடுவிக்கப்பட்ட பின்னர் இது பாரிய அடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் மக்கள் கவரப்பட்ட நிலையில், அங்கு கல்வி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த கல்வி முன்னேற்றம் விடுதலைப்புலிகள் காரணமாகவோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரணமாகவே ஏற்பட்டடதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அந்த கல்வி சமூகத்துக்கு மத்தியில் இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கமுடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.