இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து உலக நாடுகள் அவதானம்

Written by vinni   // December 9, 2013   //

UNP8712இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பக்கச்சார்பாக செயற்படுவதாக இந்த அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்காவிற்கு எதிராக கியூபா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்த தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இரண்டு வாக்குகளும், கியூபாவிற்கு ஆதரவாக 108 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

கியூபாவின் பக்கம் நியாயம் இருப்பதனை உலகம் புரிந்து கொண்ட காரணத்தினால் அமெரிக்காவிற்கு எதிராக உலக நாடுகள் வாக்களித்தன.

நாமும் அவ்வாறான ஓர் இராஜதந்திர அணுகுமுறையைய பின்பற்ற வேண்டும். 2009ம் ஆண்டு வரையில் நாட்டின் இராஜதந்திரக் கொள்கைகள் ஓரளவு நல்ல முறையில் காணப்பட்டது.

எனினும், தற்போது இராஜதந்திரக் கொள்கைகள் மிகவும் பலவீனமான முறையில் காணப்படுகின்றது.

போரின் பின்னர் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் முழு உலகமும் இலங்கைக்கு எதிராக திரும்பியுள்ளன.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டின் மூலமாக சர்வதேச சமூகத்தை வென்றேடுக்க அரசாங்கம் முயற்சித்தது.

எனினும், இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.