வேலூர் சிறையில் முருகன்- நளினி சந்திப்பு

Written by vinni   // December 8, 2013   //

jailமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன்- நளினி ஆகிய இருவரும் வேலூர் சிறையில் நேற்று சந்தித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் மாதம் இருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று காலை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் சிறைக்கு முருகன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காலை 7.30 மணி முதல் 8 மணி வரை நளினியை சந்தித்து முருகன் பேசினார். அதன்பிறகு மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு முருகன் அழைத்துச்செல்லப்பட்டார்.


Similar posts

Comments are closed.