மக்கள் எங்களை எச்சரித்துள்ளனர்: ராகுல்

Written by vinni   // December 8, 2013   //

rahul-gandhi-25409313மக்கள் எங்களை எச்சரித்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரசுக்கு பாதகமான முடிவுகள் வந்த நேரத்தில் இன்று மாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா நிரூபர்களிடம் பேசுகையில், தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முடிவுகளை அடக்கத்துடன் ஏற்று கொள்கிறோம்.

இருப்பினும் இதுகுறித்து முறையான ஆய்வு செய்யப்படும். வரவிருக்கும் பொது தேர்தல் மாநில அளவில் நடக்கும் தேர்தலில் இருந்து சற்று வித்தியாசமானது என்றும் தற்போது நடந்திருப்பது மாநில அளவிலான பிரச்னைகள் குறித்தது எனவும் கூறியுள்ளார்.

பின்னர் நிரூபர்களிடம் ராகுல் பேசுகையில், இந்த முடிவுகள் எங்களுக்கு ஒரு தகவலை தந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியுள்ளது.

மக்கள் எங்களுக்கு கடும் எச்சரிக்கையை தந்துள்ளனர். அவர்கள் தேவைக்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக்கொள்வோம் என்றும் ஆம் ஆத்மி மீது மக்கள் பலரும் இணைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் நாங்கள் பாடம் கற்க வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மோடியை பொறுத்தவரையில் அவர் பாரதீய கட்சியின் தலைவர் ஆனால் காங்கிரஸ் இந்த நாட்டின் கனவை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.