ஷீலா தீட்சித் ராஜினாமா!

Written by vinni   // December 8, 2013   //

d3d5b049-8454-4d8d-b0b1-b77e49de7b79_S_secvpfடெல்லியில் ஆட்சியை இழந்ததோடு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த லீடிங்கில் 3வது இடத்திற்கு ஏற்கனவே தள்ளப்பட்டு விட்டது . பாஜக முதலிடத்தில் இருக்கிறது. 2வது இடத்தை கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி பிடித்துள்ளது.

ஷீலா தீட்சித்தை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார். ஷீலா தோல்விமுகத்தில் இருக்கிறார்.

கடந்த 15 வருடங்களாக காங்கிரஸ் வசம் இருந்து வந்த தலைநகர் தற்போது பாஜக வசம் போகிறது. காங்கிரஸுக்கு பெரும் தோல்வியைக் கொடுத்துள்ளது ஆம் ஆத்மி.

தேர்தல் முடிவுகள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருப்பதால் காங்கிரஸ் வட்டாரம் அமைதியில் உறைந்துள்ளது. பெரும் தோல்விக்கு காங்கிரஸ் போய் விட்டதால் ஷீலா தீட்சித் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.


Similar posts

Comments are closed.