மண்ணுலகை விட்டு மறைந்த நெல்சன் மண்டேலாவிற்கு கனடிய பிரதமரின் இறுதி மரியாதை

Written by vinni   // December 8, 2013   //

stephen_harper_001மறைந்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அந்நாட்டுக்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவருடன் கனடிய முன்னாள் பிரதமர்களான ஜீன் கிறச்சியான், பிறெயின் மல்றோனி, ஹிம் காம்பல் போன்றோர் மறைந்த தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் செல்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து ஹாப்பர் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நெல்சன் மண்டேலாவிற்கான பொது நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும் பின்னர் புதன்கிழமை பிறிர்ரோறியாவில் நடைபெறவுள்ள நிகழ்விலும் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.