ஆபிரிக்க குடியரசில் குவிக்கப்படும் பிரான்ஸ் துருப்புக்கள்

Written by vinni   // December 8, 2013   //

indian armyமத்திய ஆப்ரிக்க குடியரசிற்கான தமது துருப்பினரை அதிகரிக்க பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே அங்கு 1500 துருப்பினரை அனுப்ப திட்டமிட்டிருந்த போதும், தற்போது 1900 பிரான்ஸ் துருப்பினர் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு சர்வதேச இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றி இருந்தது.

முன்னர் பிரான்ஸின் காலனைத்துவத்தின் கீழ் இருந்த மத்திய ஆபிரிக்க குடியரசில் ஏற்பட்டுள்ள வன்முறைகளில் 300க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.