தென் ஆபிரிக்காவின் முன்னாள் தலைவர் உயர்திரு நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவுக்குக் கனடியத் தமிழர் இரங்கல்

Written by vinni   // December 8, 2013   //

Mandela_2_0உலகமே போற்றும் சிறந்த மனிதர் தென் ஆபிரிக்காவின் விடுதலைக்காய் உழைத்து அந்நாட்டின் முதலாவது கறுப்பினத் தலைவராய் விளங்கிய மதிப்புக்குரிய நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென் ஆபிரிக்க மற்றும் உலக மக்களோடு கனடியத் தமிழரும் அவரது மறைவால் துயரடைகின்றனர். தென் ஆபிரிக்க மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு மதிப்புக்குரிய நெல்சன் மண்டேலா அவர்கள் மீது ஈழத்தமிழர் கொண்ட பெருமதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. இரா. தவரட்ணசிங்கம், தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை மற்றும் நிறைவேற்று இயக்குனர் திரு டன்ரன் துரைராசா ஆகியோர் ஓட்டாவா நகரில் அமைந்துள்ள தென் ஆபிரிக்கத் தூதரகத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தியதோடு அங்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் நூலிலும் கையொப்பமிட்டனர்.

இவ் வேளையில் கனடாவுக்கான தென் ஆபிரிக்கத் தூதரைக உயர் அதிகாரியை சந்தித்துப் பேசியதோடு கனடியத் தமிழரின் இரங்கல் மடல் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.