வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்காகவே பொலிஸ், காணி அதிகாரங்கள் உருவாக்கப்பட்டன: சம்பந்தன்

Written by vinni   // December 8, 2013   //

R. Sampanthar at the press conferenceதமிழ் மக்கள் தமது கூட்டமைப்புக்கு தேர்தலின்போது வழங்கிய ஆணையின்படி வடக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரத்துக்கு இலங்கை அரசாங்கம் வழிவிட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார்.

இலங்கையின் ஆங்கில செய்திதாளுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், ஏனைய மாகாணங்களை பொறுத்தவரையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தேவையற்றவையாக இருக்கலாம்.

எனினும் வடக்கு கிழக்கின் இனப்பிரச்சினை தீர்வுக்காகவே ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை தீர்வின் அம்சங்களாக உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கும் வழங்கப்படவேண்டும்.

இந்த அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்தியாவுடன் விரைவில் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

அதேநேரம் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பக்கசார்ப்பற்ற விசாரணைகளுக்கு இந்தியாவின் உதவிகோரப்படும் என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்


Similar posts

Comments are closed.