மண்டேலா ஓர் முன்னுதாரணம்: சம்பந்தன்

Written by vinni   // December 7, 2013   //

r.sampanthanநிறவெறி ஆட்சிக்குப் பின்னரான முதலாவது தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இழப்பு தமக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

உலகெங்கிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பலமாகவும் உந்துசக்தியாகவும் மண்டேலா இருந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமத்துவமற்ற நிலையாலும் அநீதியாலும் ஏற்பட்டுள்ள மோதலால் பிளவுண்ட நாடுகளின் தலைவர்களுக்கு நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையும் அவரது பணிகளும் பின்பற்றப்படவேண்டிய முன்னுதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.